சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:07 pm
protest-against-women-darshanam-in-sabarimala

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததற்கு ஏதிர்ப்பு தெரிவித்து கோவை ரயில் நிலையத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 2ம் தேதி அதிகாலை 2 பெண்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை ரயில் நிலையத்தில் இன்று சக்திசேனா அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவல்துறையினரின் அனுமதியின்றி தடையை மீறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close