பிசியோதெரபி மருத்துவர்கள் உண்ணாவிரதம்..!

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:03 pm
physiotherapy-doctors-struggle

மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிசியோதெரபி மருத்துவர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்தில் பிசியோரெபி மருத்துவமனைகளையும் பதிவு செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பிசியோதெரபி மருந்துவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிவானந்தா காலனி பகுதியில், பிசியோதெரபி மருத்துவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் ஒழுங்கு முறை சட்டத்தில், பிசியோதெரபி மருத்துவ மையங்கள் பதிவு செய்ய வழிமுறைகள் ஏற்படுத்தப்படவில்லை எனவும், இதனால் பிசியோதெரபி மையங்கள் போலி மருத்துவமனை என்று சொல்லப்படும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் எனவே பிசியோதெரபி மருத்துவமனைகளை இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close