திருச்சி: ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு - 2ஆம் நாள் !

  டேவிட்   | Last Modified : 06 Jan, 2019 04:57 pm
trichy-sanskrit-state-conference-2ndday

ஸம்ஸ்க்ருதபாரதி என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு திருச்சியில் நேற்று (டிச.5) தொடங்கியது. 

ஸம்ஸ்க்ருத மொழியின் தனித் தன்மையையும், பன்முக மேன்மையையும் வெளிப்படுத்தும் விதமாக, ஸம்ஸ்க்ருதபாரதி அமைப்பின் பலவித செயல்பாடுகளை பொதுமக்கள் அறியச் செய்யும் பொருட்டும், ஸம்ஸ்க்ருத ஆர்வலர்கள் ஒருங்கிணைவதற்கும், ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாடு திருச்சிராப்பள்ளி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியினை ஆன்மீக சொற்பொழிவாளர் விசாகா ஹரி குத்துவிளக்கு ஏற்றி நேற்று (டிச.5) துவக்கி வைத்தார். மேலும், நிகழ்ச்சியில் மாணவர்கள் படைத்த கட்டுரைகள் மற்றும் ஸ்ம்ஸ்க்ருத மொழியின் அறிவியல் பூர்வமான அம்சங்களை கண்காட்சியாக இடம் பெறச் செய்திருந்தனர்.  

மாநாட்டில் இன்று (டிச.6) உரையாற்றிய டாக்டர். ஜெயராம மஹாதேவன், உபநிடதம் ரிஷிகளின் மிக உன்னத தியான நிலையில் வெளியிடப்பட்ட மேன்மையான கருத்துக்களை தன்னிடத்தில் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார். உபநிடதங்கள் வடிவமாகவே உள்ளன. ஆசிரியர்-மாணவன், ராஜா-மக்கள், முனிவர்-ராஜா, சிறுபாலகன்-எமதர்மன் ஆகியோர்களிடையே நடந்த கேள்வி பதில்களே உபநிடதம் ஆகும். அவை மிகவும் எளிமையானவை, உண்மையின் உறைவிடம் என்று ஜெர்மன் த்ததுவமேதை மேக்ஸ் முல்லர் கூறியுள்ளார். எல்லா உபநிடதங்களும் அழிந்தாலும் ஈஷாவாஸ்ய உபநிடதம் முதல் வாக்கியம் மட்டும் சனாதன தர்மத்தை வாழவைக்கும் என்று காந்தீஜீ கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார். 

முன்னதாக, நாட்டிய சாஸ்த்ரமும் ஸம்ஸ்க்ருதமும்  என்ற தலைப்பில் பேசிய வ்ருந்தா ரமணன், இன்று இந்தியாவில் உள்ள நாட்டிய பாணிகள் யாவும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்தை ஒட்டி உள்ளது. இந்த சாஸ்திரத்தில உள்ளவை எல்லாம் வேத்த்தின் 6 அங்கங்களிலும் பொதிந்து உள்ளது. இந்த புத்தகத்தில மேடை அலங்காரம், கை முத்திரைகள், அங்க முத்திரைகள் பற்றி விரிவாக உள்ளது. நாட்டியத்தின் மூலமாக கடவுளின் நிலைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள முடியும் என்று பரதமுனிவரின் புத்தகத்தில் கடைசி அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது என பேசினார்.  திருமதி வ்ருந்தா ரமணன் தன்னுடைய மாணவர்களின் மூலமாக அபிநயம், முத்திரைகள் ஆகியவற்றை செய்து காண்பித்தார்கள். மாணவிகளின் நாட்டியத்துடன் வ்ருந்தா ரமணனின் உரை நிறைவுற்றது.

இன்று மாலை ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாட்டின் நிறைவு விழா நடைபெறவுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close