தஞ்சை கல்லூரி மாணவன் படுகொலை: காதல் பிரச்சனையால் சக மாணவர்கள் திட்டமிட்டு சதி..

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 05:47 pm
college-student-assassination

அவணியாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் மும்தசிர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது சக கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தஞ்சை மாவட்டம், அவணியாபுரத்தை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மும்தசிர்(19). இவர் மயிலாடுதுறை பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவன் நேற்று காலை திருபுவனம் அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக  5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், காதல் பிரச்சனை காரணமாக திருபுவனம் பகுதியை சேர்ந்த நியாஸ் அகமது, முகமது கலீல், சலீம் ஆகிய சக கல்லூரி மாணவர்களே கொலை செய்ததும், பின்பு காவல்துறையை திசை திருப்ப, அவரது செல்போனில் இருந்து வீட்டிற்கு தொடர்பு கொண்டு, மும்தசிர் கடத்தப்பட்டதாக கூறி ரூ.5 லட்சம்  கேட்டதும் தெரியவந்துள்ளது.  

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close