ஸம்ஸ்க்ருதம் விலை மதிக்க முடியாத செல்வம்: மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே 

  Newstm Desk   | Last Modified : 06 Jan, 2019 07:17 pm
sanskrit-is-wealth-central-minister-anand-kumar-hegde

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு 1947லேயே சென்று விட்டார்கள், 70 வருடங்கள் ஆகியும் ஆங்கிலேய அடிமை மோகம் நம்மை விட்டுப் போகவில்லை. இது நம்முடைய துர்பாக்கியம் என மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே கூறியுள்ளார். 

திருச்சியில் நடைபெற்று வரும் ஸம்ஸ்க்ருதபாரதி என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸம்ஸ்க்ருதபாரதி மாநில மாநாட்டில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு 1947 லேயே சென்று விட்டார்கள். 70 வருடங்கள் ஆகியும் ஆங்கிலேய அடிமை மோகம் நம்மை விட்டுப் போகவில்லை. இது நம்முடைய துர்பாக்கியம். நாம் எதற்காக ஸம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள வேண்டும் எதற்காக புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடையே பரவலாக இருக்கும் அபிப்ராயம் இது ப்ராம்மணர்களுடைய மொழி என்று. ஆனால் ஒரே வேதமாக இருந்த நம்முடைய வேதங்களை ரிக், யஜுர், சாம மற்றும் அதர்வண வேதமாக பிரித்துக் கொடுத்தவர் வேத வ்யாஸர். மீனவப் பெண்ணுக்கு பிறந்தவர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த வேடுவர். இந்தியாவில் ராமருக்கு, கிருஷ்ணருக்கும் அநேக கோயில்கள் உள்ளன. அவர்கள் க்ஷத்திரியர்கள் பிராமணனாக பிறந்த ராவணுக்கு கோயில்கள் இல்லை.

இப்பொழுது எல்லோரும் ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்கிறார்கள். உலகம் முழுவதும் இதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு கற்கிறார்கள்.  உலகில் உள்ள அநேக மொழிகளில் ஸம்ஸ்க்ருதம் நிறைய கலந்து உள்ளது.  மின்சாரம் மேல் நாடுகளில் கண்டு பிடிக்கப்பட்டது என்று நாம் நினைத்துக் கொண்டு  இருக்கிறோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அகஸ்திய ஸம்ஹிதை என்ற நூலில் மின்கலம் தயாரிப்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. பரத்வாஜ ஸம்ஹிதையில் விமான நிர்மாணம் பற்றியும், எரிபொருள் பற்றியும் படங்களுடன் விரிவாக உள்ளன.

பிதாகரஸ் தேற்றம் பிதாகரஸ்ஸூக்கு முன்னதாகவே எளிமையாக போதாயண ஸூத்ரம் என்ற பெயரில் உள்ளது. நம்முடைய சுதந்திரத்துக்கு முன்னால் சௌபாயீ தல்பாடே என்பவர் பாதரஸத்தை உபயோகித்து விமானத்தை செய்து பறக்க விட்டவர். ஆனால் ஆங்கிலேயர்கள் பாதரஸம் விஷத்தன்மை வாய்ந்த்து என்று கூறி அவர்களை சிறையில் அடைத்து சொத்துக்களை பறித்து கொடுமைப்படுத்தினர். இப்பொழுது நாஸா பாதரஸத்தை உபயோகப்பதி ராக்கெட் எரிபொருள் செய்வதை செயல்படுத்த யோசிக்கின்றார்கள்.

தொழில் நுட்ப மறுமலர்ச்சி இவ்வுலகில் ஏற்பட வேண்டுமென்றால் ஸம்ஸ்க்ருத புத்தகங்களை படித்துச் செயல்படுத்த வேண்டும். ஏழாவது தலைமுறை கணினிகளின் மொழி ஸம்ஸ்க்ருதம் என்று டிக் பிரிட்ஜ் என்ற அமெரிக்கன் விஞ்ஞானி உரைத்துள்ளார். 

மனிதர்களின் மனவியல் பற்றிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய உள்ளன. ஆனால் குழந்தைகளின் மனவியல் பற்றி ஸம்ஸ்க்ருதத்தில் மட்டுமே உள்ளன. ஸம்ஸ்க்ருதம் ஒரு விலை மதிக்க முடியாத செல்வம். இதை கற்றுக் கொள்வது தங்கமும் வைரமும் ஈடு செய்ய முடியாத அறிவுச் செல்வமாகும். இவ்வாறு மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே பேசினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close