கும்பகோணம்: சாரங்கபாணி கோவில் கொடியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 11:54 am
kumbakonam-sarangapani-temple-festival

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவிலில் மகர சங்கர மண உற்சவ கொடியேற்றத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

108 வைணவ தலங்களில் நான்காம் ஸ்தலமான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் மகர சங்கர மண உற்சவ தை தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவ தை தேரோட்டம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தினமும் காலை மற்றும் மாலையில் சாரங்கராஜா, ஸ்ரீதேவி, பூதேவி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கருட சேவை வரும் 10ம் தேதியும், 15ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close