3 தேங்காய் மீது 40 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பள்ளி மாணவி சாதனை

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:15 pm
the-school-student-s-achievement-at-padmasana

திருச்சியில் பள்ளி மாணவி ஒருவர் 3 தேங்காய் மீது 40 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பெற்றுள்ளார். 

நாட்டின் பாரம்பரிய யோகாவை கற்றுக் கொண்டால் மன அமைதி, ஞாபக சக்தி ஏற்படும் என்பதால் தற்போது பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பள்ளி மாணவ, மாணவிகளே ஆர்வத்துடன் அதிக அளவில் யோகா பயிற்சியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், யோகாவில் அதிக ஆர்வம் கொண்ட திருச்சி, அதவத்தூர் பகுதியை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி மதுரவள்ளி என்பவர், 3 தேங்காய் மீது 40 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து புதிய யோகா சாதனை படைத்துள்ளார்.

இந்த முயற்சி பதஞ்சலி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் பதிவேட்டில் இடம் பெற்றுள்ளது. இதே  மாணவி 100- ஆப்பிள்கள் மீது 30 நிமிடம், பத்மாசனத்தில் அமர்ந்து ஏற்கனவே மேற்கொண்ட சாதனை முயற்சியை அவரே முறியடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close