திருச்சி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை முயற்சி..!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:17 pm
trichy-indian-overseas-bank-robbery-attempt

உப்பிலியாபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். 

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இந்த வங்கியில் தினமும் பல லட்சம் ரூபாய் பரிவர்த்தனை நடைபெறும். இந்நிலையில், ஞாயிறு விடுமுறை என்பதால் வழக்கம் போல் வங்கியை பூட்டி விட்டு இன்று காலை வங்கியை திறக்க வந்த வங்கி ஊழியர் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே உள்ளே சென்று பார்த்த போது, நகை மற்றும் பணம் இருந்த பெட்டகத்தை உடைக்க முயற்சி மேற்கொண்டதும், கணினி மற்றும் ஆவணங்கள் எரிக்கப்பட்டிருந்தததும் தெரியவந்தது. 

இது குறித்து வங்கி நிர்வாகிகள்  அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உப்பிலியாபுரம் காவல்துறையினர், மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடனும், சிசிடிவி காட்சிகளுடனும் ஜன்னலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close