கோவை விழா: பார்வையாளர்களை கவர்ந்த அறிவியல், தொழில்நுட்ப கண்காட்சி..!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 09:16 am
kovai-ceremony-special-science-and-technology-exhibition

கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி பார்வையாளர்களை வியப்படையவைத்துள்ளது.

கோவையின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டு தோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 11வது கோவை விழா  கடந்த 4ம் தேதி தொடங்கியது. உணவு திருவிழா, ரேக்ளா போட்டி போன்ற பல சிறப்பு போட்டிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் கோவை விழாவின் ஒரு பகுதியாக, கொடிசியா வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. 

இதில், நீலகிரி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களது படைப்புகளை காட்சிபடுத்தினர். மாணவர்களின், ரோபாட்டிக்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் உறையவைத்தது. சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவர்களுக்கு, பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close