ஜூவல்லரி ஏற்றி வந்த காரை வழிமறித்து ரூ.92 லட்சம் மதிப்புடைய நகைகள் கொள்ளை..!

  அனிதா   | Last Modified : 08 Jan, 2019 12:26 pm
jewellery-robbed-in-near-by-kovai

கேரளாவில் இருந்து நகைக் கடைக்காக தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் எடுத்து வந்த காரை மர்மநபர்கள் வழிமறித்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜுவல்லரியிலிருந்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை பணியாளர்கள் கொண்டு வருவது வழக்கம். அதேபோல், நேற்றும் திருச்சூரில் இருந்து கோவை காந்திபுரம் கல்யாண் ஜூவல்லரிக்கு 350 சவரன் தங்க நகையும், 243.320 கிராம் வெள்ளிப் பொருட்களுடன் காரில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, காக்காசாவடியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டல் அருகே வரும்பொழுது ,திடீரென கல்யாண் ஜுவல்லரி பணியாளர்கள் வந்த காரின் பின்பகுதியில் இரண்டு கார்கள் மோதியதாகவும், பின்னர் இரண்டு கார்களில் இருந்து இறங்கி வந்த 10 பேர் கொண்ட கும்பல் கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கார் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த திருச்சூரைச் சேர்ந்த அர்ஜீன் (22), மற்றும் வில்ப்ரட்டை (33) தாக்கிவிட்டு, காருடன் நகைகளை கொள்ளையடித்து கோவை வழியாக தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.   

பறிபோன நகைகளின் மதிப்பு ரூ. 92 லட்சம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காக்காசாவடி போலீசார் வழக்கு  பதிவு  செய்து, சிசிடிவி. காட்சிகள் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து தேடி வருகின்றனர்.  மேலும்,  குற்றவாளிகளை பிடிக்க கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close