சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 07:11 pm
people-stopping-the-road-construction-work-in-trichy

திருச்சி மாவட்டம், திருப்பஞ்சலி ஊராட்சியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு போடப்படும் சாலையை தரமாக போட வேண்டும் என வலியுறுத்தி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது. 

மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பஞ்சலி ஊராட்சியில் உள்ள வனத்தாயி அம்மன் கோவில் தெருவில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை அமைக்கக் கோரி பொதுமக்கள் மனு அளித்தும், முறையிட்டும் வந்ததன் பலனாக, தற்போது ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் ரூ.11.75  லட்சம் செலவில் 700 மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, சாலை பணிகள் நேற்று நடைபெற்றன. ஆனால் சாலை தரமில்லாமலும், மிக மெலிதாகவும் அமைக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர், சாலையை தரமாக,பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில் போடப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close