சென்னை: மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு..

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:27 am
chennai-the-golden-chain-robbery

சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் வயதான பெண் ஒருவரின் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த மைதிலி (68) என்பவர் நேற்று சாலையோரம் நடந்து சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அவர் அணிந்திருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். 

இது குறித்து மைதிலி அளித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயன்று வருகின்றனர்.  

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close