சென்னை: ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட வாலிபர் வழக்கில் திடீர் திருப்பம்..!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:57 pm
youngster-to-be-dead-in-train-near-by-guindy

கிண்டி ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. 

சென்னை கிண்டி - பரங்கிமலை ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 1ம் தேதி வாலிபர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதைப்பார்த்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

முதற்கட்ட விசாரணையில், இறந்த நபர் கிண்டி அருகே உள்ள மடுவன்கரை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (21) என்பது தெரியவந்தது. இந்நிலையில், பிரகாஷின் உடற்கூறாய்வு அறிக்கையில், ரயிலில் அடிப்பட்டு இறப்பதற்கு முன்பே, அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்ததும், உடலில் பல்வேறு காயங்கள் உள்ளதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் பிரகாஷ், ஆனந்தன் என்பவரை மதுபாட்டிலால் அடித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஆனந்தன் நண்பர்களை அழைத்து வந்து பிரகாஷின் தலையில் கட்டையால் தாக்கி, அவரது வலது காலை உடைத்து, கத்தியா குத்திவிட்டு பின்னர் ரயிலின் முன்பு தூக்கி எறிந்தது தெரியவந்துள்ளது. 

இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான ஆனந்தன் என்பவரை தேடி வருகின்றனர். மேலும், ஆனந்தன் கைது செய்த பின்பு உண்மை தகவல் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close