ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு...

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:55 pm
trichy-resistance-to-online-medicine-sales

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மருந்து வணிகர்கள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி பகுதியில், ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து, மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மணப்பாறை, திருவெறும்பூர், துறையூர், லால்குடி, முசிறி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர். 

உயிர் காக்கும் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதால் தவறுகள் நடக்க கூடும் என தெரிவித்த வணிகர்கள், ஆன்லைன் மூலம் மருத்து விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்யாவிடில், 3 நாட்கள் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close