தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 11:00 am
144-in-tuticorin

தூத்துக்குடியில் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தையொட்டி இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நாளை தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க இன்று மாலை 6 மணி முதல் ஜன.11ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி வாள், கத்தி, கம்பு, கற்கள் போன்றவைகளை கொண்டு வருவதற்கும், வெளி மாவட்டங்களில் இருந்து விழாவிற்கு பொதுமக்களை அழைத்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது கூட்டம் நடத்துவதற்கும், ஊர்வலம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு, பள்ளி வாகனங்கள் , அத்தியவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், சுற்றுலா வாகனங்களுக்கு பொருந்தாது எனவும், திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close