திருச்சி: தற்கொலைக்கு முயன்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

  அனிதா   | Last Modified : 09 Jan, 2019 02:39 pm
trichy-constable-is-death

திருச்சியில் தற்கொலைக்கு முயன்ற திருவெறும்பூர் காவலர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்தவர் ஜெயதேவன்(30). காவல்துறையில் பணியாற்றி வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது, சேலம் மாவட்டம் செந்தாரைப்பட்டி பகுதியை சேர்ந்த செண்பகம் (27) என்ற காவலருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இருவரும் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்த நிலையில், இரு வீட்டாருக்கும் இவர்களது காதல் விவகாரம் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்த போதும், இருவீட்டாரும் சம்மதித்து கடந்த 17ம் தேதி நிச்சயதார்த்த விழாவை நடத்தி முடித்தனர். 

இதனிடையே, ஜெயதேவன் கடந்த சில ஆண்டுகளாக வயிற்று புண் மற்றும் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும், வயிற்று வலி தீராமல் அவதிப்பட்டு வந்ததால், கடந்த 28ம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. 

அவரை, குடும்பத்தினர் உடனடியாக மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயதேவன் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், மனமுடைந்த காதலி செண்பகம், கடந்த 4ம் தேதி அவர்கள் காதல் மலர்ந்த ராமேஸ்வரத்திற்கு சென்று, எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

செண்பகம் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், செண்பகத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரது செல்போன் மூலம் வீட்டிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், கடந்த 10 நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் ஜெயதேவன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close