கோவை: காட்டு யானை தாக்கி பெண் பலி..

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 12:59 pm
coimbatore-wild-elephant-attacking-woman-kills

கோவையில், காட்டு யானை தாக்கி ஆதிவாசி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், பூண்டி அருகே உள்ள முள்ளங்காடு பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி (எ) சாடியம்மாள் (50). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வேலைக்குச் சென்று விட்டு நேற்று மாலை வீடு திரும்பிய அவர் வழியில் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் அடிப்படையில், விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், காட்டு யானை தாக்கி ஜானகி உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே பகுதியில், ஜனவரி மாதம் 1ம் தேதி ஆதிவாசி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close