கோவை: இளையோர் தடகளப் போட்டியில் 2500 மாணவர்கள் பங்கேற்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:48 pm
coimbatore-junior-athletic-championship

கோவை விழாவையொட்டி நடைபெற்றுவரும் 7வது இளையோர் தடகள போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

கோவை மாவட்டத்தின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் கோவை விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதன் ஒருபகுதியாக எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் 7ம் ஆண்டு ஜூனியர் அத்லெட்டிக் விளையாட்டு போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டிகளை கோவை மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா தொடங்கி வைத்தார். 

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டிகளில், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 2,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. மேலும், போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close