கோவை: மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோர் கைது

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 02:59 pm
coimbatore-more-than-700-people-arrested

கோவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். 

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.18,000 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒருபகுதியாக கோவை ரயில் நிலையம் முன்பு,  தொழிற்சங்கங்கள், பொதுத்துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உட்பட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து அப்புறப்படுத்தினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close