நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் மாணவர் சேர்க்கை: மத்திய மருத்துவக்குழு ஆய்வு

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:11 pm

additional-student-admissions-at-the-nellai-government-hospital-central-medical-council

நெல்லை அரசு மருத்துவமனையில், மத்திய மருத்துவ குழு மருத்துவர்கள் கூடுதல் மாணவர் சேர்க்கைக்கான ஆய்வை மேற்கொண்டனர்.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில், மாணவர் சேர்க்கையை 150ல் இருந்து 250 ஆக உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் தலைமையில் இந்திய அரசு மருத்துவ குழு மருத்துவர்கள், இன்று நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முழுவதும் ஆய்வு செய்தனர். 

இதில், மருத்துவர்களின் விபரங்கள், இருப்பிட வசதி, ஆய்வக வசதி , மாணவர்களின் கல்விக்கான இடம் வசதி, மருத்துவ உபகரண வசதிகள், தரமான கல்விக்கான அனைத்து வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.  நாளைய தினத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் ஆய்வினை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் ஆய்வு அறிக்கை தயார் செய்து மத்திய அரசிடம் அளிக்கவுள்ளனர். 

முன்னதாக, தொழிற்சங்கள் சார்பில் நடைபெற்ற நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், மாணவர் சேர்க்கை ஆய்வுக்காக போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். கடந்த ஆண்டு இதே போல், கூடுதல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான ஆய்வில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் கூடுதல் மாணவர்கள் சேர்க்கை கிடைக்காமல் போனது குறிப்பிடதக்கது. 

newstm.in

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.