சேலத்தில் ”சக்தி குழு”: ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார்...!

  டேவிட்   | Last Modified : 09 Jan, 2019 05:57 pm
sakthi-group-in-salem-collector-rohini-inaugurated

சேலத்தில் பெண்களின் வலிமையை மேம்படுத்திட சக்தி குழு என்ற புதிய அமைப்பை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கி வைத்தார். 

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை மையமாக கொண்டு பெண்களின் வலிமையை மேம்படுத்திடும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ”சக்தி குழு என்ற புதிய அமைப்பு துவக்க விழா மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆட்சியர் ரோகிணி சக்தி குழு திட்டத்தை தொடங்கி வைத்து அஞ்சல் அட்டையையும் வெளியிட்டார். 

மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜார்ஜ் ஜோர்ஜ், சுகாதார பணிகள் இணை இயக்குனர் பூங்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close