கோவை: பாரத ஸ்டேட் வங்கி கிளையில் முதலீட்டு சேவை மையம் தொடக்கம்...

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:32 am
investment-service-center-to-be-started

கோவை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் முதலீட்டு சேவை மையத்தை, வங்கியின் நிர்வாக இயக்குநர் பி.கே.குப்தா தொடங்கி வைத்தார். 

பாரத ஸ்டேட்  வங்கியின் நூறாவது முதலீட்டு சேவை மையம், கோவை, வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள கிளை வங்கியில் தொடங்கப்பட்டது. வங்கி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் பி.கே.குப்தா கலந்து கொண்டு முதலீட்டு சேவை மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.கே.குப்தா,  பாரத ஸ்டேட் வங்கி மட்டுமே எல்லா வங்கிகளையும் விட குறைவான வட்டி விகிதத்தில் கடன் தருவதாகவும், வங்கியின் நூறாவது முதலீட்டு சேவை மையத்தை இங்கு துவங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வரும் 2020ஆம் ஆண்டிற்குள் கூடுதலாக 50 முதலீட்டு சேவை மையங்களை தொடங் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த முதலீட்டு சேவை திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கி தான் என குறிப்பிட்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close