கோவை: லஞ்சம் வாங்கிய வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கைது...

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:22 pm
coimbatore-officers-arrested

கோவையில், சொத்து பத்திரத்தில் பெயர்மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜய் (58). இவரது மகன் கோபால் சமீபத்தில் இறந்து விட்டதால் அவரது பெயரில் உள்ள வீட்டு பத்திரத்தை தன் பெயருக்கு மாற்றம் செய்ய, அவர் வீட்டு வசதி வாரியத்தை அனுகியுள்ளார். அப்போது வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் மோகன், தண்டபாணி ஆகியோர், பெயர் மாற்றம் செய்ய தலா ரூ.3,000 வீதம் ரூ.6,000 லஞ்சமாக கேட்டுள்ளனர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் விஜய் தகவல் அளித்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அளித்த ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜய்,  வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோகன், தண்டபாணி ஆகியோரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close