சென்னை: பொதுத்துறை அலுவகக் கதவை உடைக்க முயன்ற நபர் போலீசில் ஒப்படைப்பு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:24 pm
the-person-tried-to-break-the-public-sector-office-door

சென்னை காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக கதவை உடைக்க முயன்ற வட மாநில வாலிபரை ஊழியர்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை, எழிலகம் அருகே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணிக்கு வந்தபோது, வடமாநில வாலிபர் ஒருவர் முதல் தளத்தில் உள்ள அறையின் கதவை உடைக்க முயன்றதைக் கண்டுள்ளனர். இதையடுத்து அந்த ஊழியர்கள் அவரை பிடித்து கட்டி வைத்துவிட்டு, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

விரைந்து வந்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் அந்த நபரை மன நல காப்பகத்தில் சேர்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close