திருச்சி: பிரபல ஜவுளி கடையில் வருமானவரித் துறை திடீர் சோதனை..

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 02:45 pm
income-tax-department-raid

திருச்சி பிரபல ஜவுளிகடையில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

திருச்சி என்.எஸ்.பி சாலையில் சாரதாஸ் என்ற பிரம்மாண்ட ஜவுளிக்கடை உள்ளது. தினமும் லட்சக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் இந்த கடையில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்தன. இந்நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் 50க்கும் மேற்பட்ட வருவமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக கடைக்குள் புகுந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.   

இந்த சோதனையில், கோடிக்கணக்கில் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close