சென்னை: செல்போன் கடையில் கொள்ளை

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:15 pm
robbery-at-the-cellphone-store

சென்னையில், செல்போன் கடையின் பூட்டை உடைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டை சத்தியமூர்த்தி தெருவில் நாகூர் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. வழக்கம் போல் நேற்றிரவு கடையை மூடிவிட்டு சென்றநிலையில், அதிகாலை 2 மணியளவில் கடை திறந்திருப்பதாக நாகூருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகூர் விரைந்து வந்து பார்த்தபோது, கடையில் இருந்த ரூ.2.5 லட்சம் பணம், ரூ.7 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நாகூர் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் கடையை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close