சென்னை: துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டிய 2 பேர் கைது...!

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 04:51 pm

chennai-theft-2-arrested

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள துணிக் கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி சட்டைகளை திருடிச் சென்ற 2 பேரை ஜாம் பஜார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி பாரதி சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அப்பகுதியில் துணிக் கடை (First Look Men's Wear) ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இரவு 1 மணியளவில் கடை மூடும் நேரத்தில் அங்கு இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த 2 பேர், அவசரமாக சட்டை எடுக்க வேண்டும் எனக் கூறி கடையினுள் வந்துள்ளனர். மேலும், 12 சட்டைகளை எடுத்துக் கொண்ட அவர்கள் சிவகுமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி  பணம் தராமல் சட்டைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக ஜாம் பஜார் காவல் நிலையத்தில் சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
 
இந்நிலையில் நேற்றிரவு தியாகராய நகர் பகுதியில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்த இரண்டு பேர் திருநங்கைகளுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்ட ரோந்துப் பணி காவலர்கள் அவர்களை விசாரிக்கச் சென்றபோது அவர்கள் வந்த வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர்கள் வந்த வாகனத்தைக் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்துச் சென்றதுடன் அதன் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்து பள்ளிக்கரணையைச் சேர்ந்த சிவராமன்(22) மற்றும் விக்னேஷ் (எ) சாலமன்(19) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவர்கள் திருவல்லிகேணி பகுதியில் உள்ள துணிக் கடையில் சட்டைகளை திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளிடம் இருந்து துணிக்கடையில் திருடப்பட்ட சட்டைகளில் 9 சட்டைகள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஜாம்பஜார் காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் மீது ஏற்கனவே பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.