மெட்ரோ ரயில்-நம்ம ஆட்டோ இணைந்து ”எலக்ட்ரிக் ஆட்டோ” இயக்கம் !

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 05:08 pm
electric-auto-at-chennai

மெட்ரோ ரயில்-நம்ம ஆட்டோ இணைந்து சென்னையில் எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. 

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகமும், நம்ம ஆட்டோவும் இணைந்து எலக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் நரசிம்ம பிரசாத் துவக்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த எலக்ட்ரிக் ஆட்டோ சேவை மூலம் புகை மற்றும் சத்தமில்லா பயணம் செய்ய முடியும் என்று தெரிவித்தார். மேலும், ஆட்டோவை நிறத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இலவசமாக சார்ஜ் செய்ய ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்த எலக்ட்ரிக் ஆட்டோ ஆலந்தூர் முதல் போரூர்  டி.எல்.எஃப். ஐ.டி. பார்க்  வரை சென்று திரும்பும். ஒரே கட்டணமாக ஒரு நபருக்கு 10 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close