வயதான தம்பதியினரை தாக்கிய ரவுடிகள் மற்றும் காவல் ஆய்வாளர் மீது புகார்..!

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 05:25 pm

complaint-against-accused-and-inspector-of-police

வருமான வரித்துறையினர் போல் நடித்து வீட்டின் கதவை உடைத்தது மட்டுமல்லாமல், வீட்டிலிருந்த வயதான தம்பதியினரை அடித்த ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள காமராஜர் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் பிரபாகர். இவர் நீலாங்கரை பகுதியில் உள்ள தனது வீட்டின் கீழ் தளத்தின் தனது தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேல்தளத்தில் தனது தந்தை கனகராஜ், தாய் சிறியபுஷ்பா மற்றும் தனது அண்ணன் மனைவி மகள்கள் என அவரது குடும்பத்தினரை தங்க வைத்துள்ளார். இந்நிலையில், வருமானவரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு ரவுடிகள் சிலர் தனது வீட்டினுள் புகுந்து தனது தாய் தந்தையினரை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபாகர், கடந்த 6 ஆம் தேதி அதிகாலை அறிமுகம் இல்லாத 7 நபர்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் என கூறிக் கொண்டு தனது நீலாங்கரை வீட்டின் கதவை தட்டியதாகவும் அவர்களிடம் பிரபாகரின் தந்தை கனகராஜ் அடையாள அட்டையை காண்பிக்கச் சொல்லவே ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டின் கதவை அடித்து உடைத்து உள்ளே நுழைந்து பிரபாகரின் தாய் தந்தையினரை அடித்து கீழே தள்ளியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர்கள், தன்னை தமிழ்மணி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, நீங்கள் சாமுவேல் மகேந்திரன் என்பவருக்கு தர வேண்டிய பணத்தை தராததால் உடனடியாக வீட்டை காலி செய்துவிடுங்கள் என மிரட்டியதாகவும் அதை மறுக்கவே வீட்டிலுள்ள பொருட்களை அடித்து உடைத்து தனது குடும்பத்தினரையும் அவர்கள் துன்புறுத்தியதாக தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகாரை வாங்காமல் நீலாங்கரை காவல் ஆய்வாளர் நடராஜன், அவர்களுக்கு சாதகமாக பேசி தனது தாய் தந்தையினரை வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், தனது குடும்பத்தினரை துன்புறுத்திய ரவுடி தமிழ்மணி உள்ளிட்ட ரவுடிகள் மீதும் அவர்களை தூண்டி விட்ட சாமுவேல் மகேந்திரன்  மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் ரவுடிகளுக்கு ஆதரவாக பேசும் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.