சேலம்: புதிய பேருந்துகளை துவக்கி வைத்தார் ஆட்சியர் ரோஹிணி !

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 06:26 pm
new-buses-at-salem-inaugurated-by-salem-collector-rohini

பொங்கல் பண்டிகையையொட்டி சேலத்தில் புதிய சொகுசு பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ரோகினி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய பேருந்துகளின் வருகையால் பொதுமக்களின் கவனம் அரசு பேருந்துகள் மீது அதிகளவு திரும்பியுள்ளது. தனியார் பேருந்துகளை பெரும்பாலானோர் விரும்பி வந்த நிலையில் அதே சொகுசு வசதியுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை கடக்கும் என ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான பயணம் தொடர்வதால் அரசு பேருந்துகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதனையடுத்து சேலம் மண்டலத்திற்கு 112 பேருந்துகளை தமிழக முதல்வர் கடந்த 7 ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சேலம் கோட்டத்திற்குட்பட்ட 53 பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ரோஹிணி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சொகுசு வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சிரமமின்றி அமர்ந்து பணி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்களில் இருப்பது போன்று பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணிந்து கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close