சேலம்: பெண்கள் முன்னேற்றம் குறித்த பயிற்சி முகாம்

  டேவிட்   | Last Modified : 10 Jan, 2019 06:35 pm
women-education-programme-at-salem-collector-speech

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற அடிப்படையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் அரங்கில் அரங்கில் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார் மேலும் ஆட்சியர் ரோகினி கூறுகையில், பெண்கள் பொதுசுகாதாரம் காக்கின்ற வகையிலும் செயல்பட வேண்டும் பெண் எப்பொழுதும் அவரைப்பற்றி யோசிப்பது மிக மிக குறைவு அவர்கள் எப்பொழுதும் தங்களுடைய குடும்ப நலனுக்காகவே செயல்பட்டு வருகின்றனர் ஆகவே பெண்கள் தங்களுடைய உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை கொள்ள வேண்டும் யோகா பயிற்சி தினமும் மேற்கொள்ள வேண்டும் இதனால் பெண்களின் உடல் ஆரோக்கியம் சீராகும் மேலும் பெண்கள் பேருந்தில் செல்லும் பொழுது குட் டச் பேட் டச் போன்ற பிரச்சினைகள் பேருந்துகளில் ஏற்படும்பொழுது எவ்வாறு அந்த பிரச்சினை எதிர்கொள்வது  என்றும் பல கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த பயிற்சி முகம்  இன்றும் நாளையும் நடைபெறுகிறது  இந்த பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close