ஜெயலலிதா நினைவிடத்தில் செல்போன் திருடியவர் கைது...!

  டேவிட்   | Last Modified : 11 Jan, 2019 04:12 pm
mobile-theft-at-jayalalitha-s-memorial-place-one-arrested

சென்னை திருவல்லிக்கேணியில் செல்போன்களைத் திருடியவரை வீடியோ கால் மூலம் பேசி இளைஞர்கள் பிடித்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் குருமன் குட்டையைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன். இவர் ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அருகில் இருந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு நுழைந்த மர்ம நபர், வெள்ளையப்பன் மற்றும் அவரது நண்பர்களின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 செல்போன்களைத் திருடிச் சென்றார்.

இதையடுத்து திருடப்பட்ட செல்போனுக்கு மற்றொரு செல்போன் மூலம் வெள்ளையப்பன் வீடியோ கால் செய்துள்ளார். அதில் பேசிய நபரை கண்டறிந்த அவர்கள், திருடனைப் பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கோவை மாவட்டம் கருப்பண்ண கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நல்லி வீரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவனை போலீசார் கைது செய்து, அவனிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close