கோவையில் மூன்று நாட்கள் பிரம்மாண்ட தமிழர் திருவிழா...!

  சாரா   | Last Modified : 16 Jan, 2020 08:48 am
3-days-thamizhar-thiruvizha-in-coimbatore

கோவை மாநகர் கொடிசியா வளாகத்தில்,  பொங்கல் திருநாளையொட்டி., மூன்று நாட்கள் மிக பிரமாண்டமாக தமிழர் திருவிழா கொண்டாடப்படவுள்ளது

பண்டையத் தமிழர்களின் வீரத்துக்கும், விவேகத்துக்கும், பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவாக மூன்று நாட்கள் சிறப்பு திருவிழாவாக பாரம்பரியத்தை பறைசாற்றும் 10த்திற்கும்  மேற்பட்ட வீர விளையாட்டுகளான சடுகுடு, உறியடித்தல், வழுக்குமரம், இளவட்டக் கல், சிலம்பம், மல்யுத்தம், பம்பரம், கயிறு இழுத்தல், கர்லா சுத்துதல் மற்றும் 20க்கும் மேற்பட்ட மெய்சிலிர்க்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளாக கரகாட்டம், ஒயிலாட்டம், பறை, மள்ளர் கம்பம் மற்றும் கால்நடை கண்காட்சி நடைப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கால்நடை சந்தை, நாட்டு மாடு, நாட்டுநாய், குதிரை, காளைகள் சண்டை சேவல் போன்ற நிகழ்ச்சிகளும், 50க்கும் மேற்ப்பட்ட பாரம்பரிய உணவு வகைகளும் இடம் பெறுகின்றன. குழந்தைகளுக்கு பேச்சுப் போட்டி, ஒவியப்போட்டி, கோலப் போட்டி, சிறப்பு பெண்கள் விளையாட்டு போட்டிகள், பட்டம் விடுதல், பொம்மலாட்டம் என பல வகையான நிகழ்ச்சிகளும்  நடைப்பெறவுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close