நெல்லை: குதிரை வயிற்றில் பிளாஸ்டிக்... ஆபரேஷன் சக்சஸ்...!

  டேவிட்   | Last Modified : 11 Jan, 2019 04:58 pm
nellai-operation-success-for-horse

நெல்லை மாவட்டத்தில் குதிரை ஒன்றிற்கு வயிற்றில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. மூன்றரை நேரம் அறுவை சிகிச்சை செய்து அவற்றை மருத்துவர்கள் அகற்றினர். 

தென்காசியில் ஜார்ஸ் என்பவர் தனது பண்ணையில் 12 குதிரைகளை வளர்தது வருகிறார். இதில் ஒன்றரை வயதுள்ள குதிரை கடந்த 20 நாட்களுக்கு முன் வயிற்று வலியால் அவதிப்பட்டது. இதனால் கடந்த 2ஆம் தேதி திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மருத்துவர்கள் பரிசோதித்ததில் குதிரைக்கு குடல்கள் வீங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் குதிரைக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. மருத்துவர் தர்மசீலன் தலைமையிலான மருத்துவக்குழு இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டது. அப்போது குதிரையில் குடல் பகுதியில் நைலான் கயிறுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவைகள் அகற்றப்பட்டது.  அறுவை சிகிச்சை மூன்றரை மணி நேரம் நடந்தது. நான்கு மணி நேரம் மயக்கத்தில் இருந்த குதிரை பின்னர் எழுந்து, தனது வழக்கமாமன பணிகளைத் தொடர்ந்தது. 

இதுகுறித்து மருத்துவர் தர்மசீலன், குதிரைகள் முன்னங்கால்களை தரையில் அடித்தல், வயிற்றுப் பகுதியை திரும்பிப்பார்த்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close