பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம்.... பத்திரிகையாளர் கைது...!

  டேவிட்   | Last Modified : 11 Jan, 2019 05:34 pm
journalist-kissed-woman-police-arrested

பத்திரிகையாளர் அடையாள அட்டை வைத்திருந்த சிரஞ்சீவி என்பவர் பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்டதால், போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தமிழக ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மத்திய சென்னை தலைவர் என அடையாள அட்டை வைத்திருந்த சீரஞ்சிவி அனிஸ் என்பவர் ஸ்பென்சர் பிளாசா முதல் தளத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். பத்திரிகைத் துறையில் அவர் என்ன என்பது கேள்விக்குறியே.

இந்நிலையில் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரை தனியறைக்கு மீட்டிங் என்று அழைத்து அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து, தகாத செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சீரஞ்சிவி அனிஸ் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close