50 சமையல் கலைஞர்கள்... 100 அடி தோசை... உலக  கின்னஸ் சாதனை..!

  டேவிட்   | Last Modified : 11 Jan, 2019 07:08 pm
100-feet-dosa-guinness-record

உலகிலேயே முதல் முறையாக 50 சமையல் கலைஞர்கள் இணைந்து 100 அடி நீளத்தில் மிகப் பிரமாண்டமான தோசையை சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் தயாரித்தனர்.

செஃப் வினோத் தலைமையில் சரவணபவன் சமையற்கலை வல்லுனர்கள் இணைந்து இன்ற (ஜன.11) மாலை 3 மணிக்கு நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்வில் ஏராளமான  பிரபலங்கள் பங்கேற்றனர். 7 டன் எடை கொண்ட தோசை கல்லில், 27 கிலோ எடை கொண்ட பிரமாண்ட தோசை 100 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டது.

பிரமாண்ட தோசையை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்டில் பதிவு செய்தனர். கின்னஸ் புக் ஆஃப் ரெக்ர்டில் இந்த 100 அடி தோசை இடம்பெற உள்ளது.  இதற்குமுன் அகமதாபாத்தில் உள்ள ஸங்கல்ப் ஹோட்டல் தயாரித்த 54 அடி நீள தோசையே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த 100 அடி நீள தோசை தயாரிக்கப்பட்டது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close