"எம்.ஆட்டோ" செயலி திருச்சியில் அறிமுகம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 10:53 am
trichy-introduction-to-m-auto-app

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக செயலி மூலம் பொதுமக்கள் ஆட்டோவை தொடர்பு கொண்டு பயணம் செய்யும் "எம் ஆட்டோ" செயலி திருச்சியில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

மக்கள் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாகிகள், திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது நிறுவனர் மன்சூர் அலி கூறுகையில், "ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மக்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் வகையிலும் திருச்சியில் எம் ஆட்டோ  என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி மக்கள் ஆட்டோ சேவையினை பெறலாம். மேலும், திருச்சியில் இம்மாத இறுதிக்குள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான எலக்ட்ரிக்  ஆட்டோக்களை தொடங்கவுள்ளதாகவும், இதில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close