மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனை கூட்டம்..

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 11:02 am
avaniyapuram-jallikattu-meeting

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் மாவட்ட நீதிபதி ராகவன் தலைமையிலான 3 வழக்கறிஞர்கள் கொண்ட குழு, அனைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில், போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்தும், பார்வையாளர்கள் அமர்வதற்கான பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்கு பின், இந்த குழு போட்டி நடைபெறவுள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close