ஷேர் ஆட்டோ மோதி விபத்து: குற்றப்பிரிவு காவலர் உயிரிழப்பு

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 11:56 am
share-auto-accident

சென்னையில் அதிகவேகமாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாக்கியதில் குற்றப்பிரிவு காவலர் உயிரிழந்தார். 

சென்னை மணலியிலிருந்து திருவொற்றியூர் நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோ, சி.பி.சி.எல் தொழிற்சாலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த 2 இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செங்குன்றம் காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த கருப்புசாமி(40), மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சி.பி.சி.எல் தொழிலாளி பிரபு (38), தனம் (40), ஆட்டோ ஓட்டுநர் முத்து (24), மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த மாணவன் நவீன்(20), கோபிநாத்(42) உள்ளிட்ட 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், படுகாயமடைந்த காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மாதவரம் போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close