சமயபுரம், நெல்லை: தைப்பூச திருவிழா கொடியேற்றம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 12:58 pm
thai-poosa-festivel

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருச்சியில் உள்ள பிரசித்திபெற்ற சமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவிலில் உள்ள தங்க கொடிமரத்திற்கு சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

தொடர்ந்து, அம்மன் படம்  உடைய தைப்பூசக்கொடியானது வேத மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து  அம்பாள் மரகேடயத்தில் எழுந்தருளி உள்பிரகாரங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூசத்தின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்சவம் வரும் 20 ம் தேதி கோவில் தீர்த்தக் குளத்தில் நடைபெறவுள்ளது. 

இதேபோல், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான குலசேகர நாதர் திருக்கோயிலில் தைப்பூச விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில்  ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close