சென்னை: மக்கும், மக்கா குப்பை அகற்றுவது குறித்த செயல் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 01:32 pm
demonstration-on-the-removal-of-garbage

சென்னையில் நடைபெற்ற மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து நடைபெற்ற செயல்விளக்க நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

மத்திய அரசின் சிப்பெட்(CIPET) எனப்படும் கல்வி நிறுவனம் தனது பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக தற்போதைய சூழலில் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரித்து அப்புறப்படுத்துவது குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனித்தனியே பிரிப்பது குறித்தும், அவற்றை குழித்தோண்டி புதைப்பது குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பித்தார். மக்கா குப்பைகளை அதற்கான நிறுவனங்களை அணுகி ஒப்படைத்தால் அவர்கள் அதை மறுசுழற்சி மூலம் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள் என தெரிவித்த அவர், பொதுமக்கள் அனைவரும் இதை பின்பற்றி மண்ணின் வளத்தையும், நீர்வளத்தையும் அடுத்த சந்ததியினருக்கு பயன்படச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், "வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் கழிவு மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவதால் பொதுமக்களுக்கு இதனை எடுத்துக்கூறவும், அறிவுறுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குப்பைகளை பிரிக்காமல் அப்படியே கொட்டுவதால் மக்கும் குப்பைகளுடன், மக்கா குப்பைகளும் மருத்துவ கழிவுகளும் மண்ணினுள் புதைந்து மண்ணின் வளத்தை அழிக்கின்றன. இது இப்படியே தொடர்ந்தால் ஒட்டுமொத்த நீர் வளத்தையும் அழித்துவிடும்" என அப்போது தெரிவித்துள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close