சென்னையில் 6 நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 03:04 pm
income-tax-department-raid

சென்னை யானைக்கவுனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை யானைக்கவுணி பகுதியில் உள்ள மிண்ட் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை மற்றும் அதனை சுற்றியுள்ள 5 பிரபல துணிக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த 6 நிறுவனங்களும் அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்ததையடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

சோதனைக்கு பின்னரே எவ்வளவு பணம் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனையானது தொடந்து நடைபெற்று வருகிறது. 20 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close