கும்பகோணம்: வீட்டின் பூட்டை உடைத்து 24 சவரன் நகை கொள்ளை

  அனிதா   | Last Modified : 12 Jan, 2019 05:22 pm
theft-in-gold-jewellery

கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் செல்லம் நகரில் வசித்து வருபவர் சிராஜ்தீன். கும்பகோணத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மேலாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த மாதம் 13ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மெக்காவிற்கு பயணம் சென்றுள்ளார். தினந்தோறும் மாலை நேரத்தில் வீட்டின் முன்பகுதியில் உள்ள விளக்குகளை எரியவிடும் படி ஒருவரை நியமித்துள்ளார். அதன்படி, அந்த நபர் இன்று காலை விளக்குகளை அணைப்பதற்காக வந்துள்ளார். அப்போது கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சிராஜ்தீன் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். 

உறவினர்கள் வீட்டினுள் சென்று பார்த்தபோது இரு அறைகளில் இருந்த ஆறு பீரோக்களும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 40 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.  இச்சம்பவம் குறித்து கும்பகோணம் நகர கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை  வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 3 நபர்களை தேடி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close