குற்றாலம்: தனியார் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி ஆண்டாள் கல்யாணம்....

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:40 pm
pongal-festive-special-programe

குற்றாலம் மகளிர் கல்லூரியில் பாரம்பரிய முறை படி நடைபெற்ற ஆண்டாள் திருக்கல்யாணம் அனைவரையும் வியப்படையவைத்தது. 

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில், பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் பாராம்பரிய முறை படி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக குழுக்கள் முறையில் கல்லூரி மாணவிகள் 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, இருவரும் 40 நாட்கள் பாவை நோன்பு மேற்கொண்டனர்.

 

அதை தொடர்ந்து இன்று ஆன்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக மாப்பிள்ளை அழைப்பு, கன்னிகாதானம் போன்ற சடங்குகள் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மாலை மாற்று வைபவம், அம்மியில் வைத்து மெட்டி அணிதல் நளங்கு போன்ற சடங்குகளும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களது பாரம்பரியத்தை இந்த விழா மூலம் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close