ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்திருவிழா..

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:52 pm
srirangam-ranganathar-kovil-festive

ஸ்ரீரங்கம் ரெங்கநாதார் கோவிலில் தைத்திருவிழா  கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரெங்கநாதார் கோவிலில், தைத்திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  மாலையில் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள்:

இரண்டாம் நாளான 13ம் தேதி: காலை 5.30 மணிக்கு  ஒற்றை பிரபை வாகன புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.

14ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும்,

15ம் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும்,

16ம் தேதி காலை சேச வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும்,

17ம் தேதி  காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

18ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவை கண்டருளிகிறார்.

19ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைத்தேரோட்டம் வரும் 20ந் தேதி காலை நடைபெறுகிறது. 

21ம் தேதி சப்தாவரணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிறைவு நாளான 22-ம் தேதி நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வருகிறார். 

விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், மற்றும் கோவில்  ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close