சென்னையில் கொத்தடிமைகள்... காயங்களுடன் குழந்தை தொழிலாளர்கள் மீட்பு...!

  டேவிட்   | Last Modified : 12 Jan, 2019 05:23 pm
child-laborers-rescued-in-chennai

சென்னை கொண்டித்தோப்பில் உள்ள பானிபூரி கடையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த 8 சிறுவர்களை வருவாய்த் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். 

சென்னை கொண்டித்தோப்பில் பானிபூரி தயாரித்து விற்பனை செய்யும் கடையில் சிறுவர்கள் வேலை செய்வதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறையினர், வருவாய் துறை அதிகாரிகள், குழந்தை தொழிலாளர் ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து குறிப்பிட்ட அந்த கடையில் விசாரணை மேற்கொள்ள சென்றனர். அப்போது விஷயம் அறிந்த பானிபூரி கடை உரிமையாளர் முன்னா லால் தலைமறைவானார். 

முன்னா லாலின் மகன் ராஹீல் லாலிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொத்தடிமையாக வாங்கப்பட்டு, பானுபூரி கடையில் வேலைப்பார்த்து வந்த வாரணாசியைச் சேர்ந்த  8 சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது. சிறுவர்களை மீட்ட அதிகாரிகள் அவர்களை ராயபுரம் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்தனர். இதில் ஒரு சிறுவனின் கைகளில் எண்ணெய் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close