கோவை விழா: வீதியெங்கும் ஓவியங்கள்... வழிநெடுகிலும் விளக்குகள்...!

  டேவிட்   | Last Modified : 12 Jan, 2019 06:59 pm
kovai-thiruvizha

கோவை பந்தய சாலையைில், கோவை விழா வீதியெங்கும் ஓவியங்கள்,  வழியெங்கும் வண்ண விளக்குகளால்  அலங்கரிக்கப்பட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் விழா 11 ஆம் ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேசிய அளவில் புகழ்மிக்க ஓவியர்கள்,  வரைந்த ஒவியங்கள்  பந்தய சாலையில் இன்று (டிச.12) காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் சாலைகளில், வண்ண அலங்கார வளைவுகள் , நுழைவாயிலை கடக்கும் போதே, மனதை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒவியத்தெருவை கோவை மாநகர துணை காவல் துறை ஆணையர் சுஜித்குமார் தொடங்கி வைத்தார்.

இது குறித்து நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் இன்றும் நாளையும் நடக்கும் நிகழ்வில் ஓவியங்கள் கண்காட்சியும், 15 ஒவியர்களால் களிமண், பென்சில், பெயிண்டிங் பயன்படுத்தி  ஒவியங்கள் வரைவதற்கு பயிற்சியும் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு 25 ஆயிரம் பார்வையாளர்கள் கோவை விழாவில் பங்கேற்றதாகவம், இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும், கோவை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஒவியப்போட்டியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 5000 பேர் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர். இந்த போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு கேடயமும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 

இவை தவிர, இந்த விழாவில் பழங்காலத்து பழைய கார் மற்றும் பைக் கண்காட்சியும் நடைபெற்றதன.  இதில் பழமைவாய்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுத்து நின்றன. மோர்ஸ் 8 சீரியஸ் -1941, புல்மேன் மெர்டிஸ்பென்ஸ் -1974, போர்டு ஜீப் -1958, அஸ்டன்-7 -1947, மோரிஸ் மைனர் -1951, ஓல்ஸ்வேகன் பீட்டல்-1957, மற்றும் போர்டு-A-1929 மற்றும் பைக் எஸ் டி ஜாவா  மற்றும் 3 டயர் கார் மெசர்ஸ்மித் -1955 மற்றும் வில்லியம்ஸ் ஜீப் போன்ற உள்ளிட்ட பழங்காலத்து கார் வகைகள் அணிவகுத்து நின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close