சென்னை ரவுடி கொலை: 6 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 12:54 pm
chennai-rowdy-murder

சென்னையில் பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை செம்பியம் பகுதியை சேர்ந்தவர் அப்பு (எ) தினேஷ்.  இவர் மீது 3 காவல் நிலையங்களில் வழிப்பறி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்றிரவு, ஓட்டேரி பகுதியை அடுத்த பென்னி மில் அருகே சென்று கொண்டிருந்த அப்புவை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்றனர். ரத்த வெள்ளத்தில் இருந்த அப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர், அப்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான சதீஷ்குமார்  மற்றும் சசிகுமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த முதற்கட்ட விசாரணையில், கடந்த 2012 ம் ஆண்டு சதீஷ் மற்றும் சசிகுமார் சகோதரர் கொலை வழக்கில் அப்பு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர் என்பதும், இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேறொரு வழக்கில் கைதான அப்பு இரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய கதிர், சரவணன், கோகுல், மோனிஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close