கல்யாண் ஜூவல்லரி கொள்ளை: 7 பேர் கைது

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:05 pm
kalyan-jewellery-robbery

கோவையில், காருடன் ரூ.92 லட்சம் மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரளா மாநிலம் திருச்சூர் கல்யாண் ஜூவல்லர்ஸ் தலைமையகத்திலிருந்து, கடந்த 7ம் தேதி கோவையில் உள்ள, அவர்களுடைய கல்யாண் ஜூவல்லர்ஸ் கிளைக்கு 350 பவுன் தங்க நகை, 243.320 கிராம் வெள்ளி நகைகள் ஆகியன ஓர் காரில் வைத்து எடுத்துவரப்பட்டன. அப்போது, காக்காசாவடி அருகே, அந்தக்கார் வந்தடைந்தபோது ஒரு கும்பல் காரை வழிமறித்து ஊழியர்களை தாக்கிவிட்டு காருடன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். 

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக, தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், கொள்ளை சம்பவத்தில் 12 பேருக்கு தொடர்பிருப்பதாகவும் தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அனைவரையும் பிடித்து விசாரித்தால் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது தெரியவரும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close