கும்பகோணம்: திருமணம் நிச்சயிக்கப்படயிருந்த பெண் மாயம்...

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:16 pm
kumbakonam-the-women-missing

கும்பகோணம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த பெண் மாயமாகியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் திருபுவனம் சொக்கப்பனை தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் லலிதா (20) அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல் கடந்த 9ம் தேதி மருத்துவரின் அலுவலகத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற லலிதா, மருத்துவமனைக்கு செல்லாமல் மாயமாகியுள்ளார்.

வரும், 23ம் தேதி லலிதாவுக்கும் பட்டீஸ்வரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், அன்று திருமண நிச்சயதார்த்தத்திற்கு புடவை, தாம்பூலம் வாக்குவதற்காக உறவினர்கள் வந்துள்ளனர். ஆனால், வெகுநேரமாகியும் லலிதா வீடுதிரும்பவில்லை. இதையடுத்து மருத்துவமனை சென்று விசாரித்தபோது, லலிதா மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், பெண் மாயமாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், லலிதா மாயமாகி 4 நாட்கள் ஆகியும் லலிதாவிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால், பெற்றோர் இன்று திருவிடை மருதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close